இயக்குனர் சேரன் விஜய்மில்டன் இயக்கவுள்ள படத்தில் நடிப்பதற்காக நடத்தப்பட்ட போட்டோசூட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது சேரனின் இந்த புகைப் படத்தை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள இயக்குநர் விஜய் மில்டன், சேரனுடனான எனது அடுத்த ஒத்துழைப்பு என பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் யதார்த்தமான உயிரோட்டமிக்க திரைப்படங்களை இயக்கியதன் மூலம் இன்றுவரை தமிழக மக்கள் மத்தியில் தரமான படைப்பாளி என்கிற மரியாதை இருக்கிறது இயக்குனர் சேரனுக்கு இவர் கடைசியாக இயக்கிய திருமணம், ராஜாவுக்கு செக் ஆகிய படங்கள் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை.

இதன் காரணமாக புதிய படங்களை இயக்குவதில் இருந்தும், நடிக்காமலும் இருந்து வந்தார்நீண்ட நாட்களுக்கு பின் திரைப்படங்களில்நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சேரன் இதுவரை இல்லாத வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள்இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் , கோட் மற்றும் ஷூட் போட்டுக்கொண்டு , தலையில் கொண்டையுடன் இருப்பதை சமூக வலைத்தளங்களில் ஆச்சர்யமாக பார்ப்பதுடன் பகிர்ந்தும் வருகின்றனர்.