தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 34வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
அ இஅதிமு கழகத்தின் நிறுவன தலைவரும் ,முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 34 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் ஆண்டிபட்டி வைகை சாலையில் உள்ள எம்ஜிஆரின் முழு உருவச்சிலைக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ் பி எம். சையது கான் தலைமையில் , ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
உடன் மாவட்ட துணைச் செயலாளர் முறுக்கோடை ராமர், முன்னாள் மாவட்ட செயலாளர் டி டி. சிவக்குமார், முன்னாள் எம்பி .பார்த்திபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் , ஒன்றிய துணைச் செயலாளர் அமரேசன், முன்னாள் எம்எல்ஏ.ஆர்.டி கணேசன்,பொன்முருகன், கவிராஜன், வீரக்குமார், சாம்சன்மாவட்ட மாணவரணி பொருளாளர் முருகேசன், மகளிர் அணி கொடி அம்மாள், மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.