• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வண்டியூர் தெப்பக்குளத்திற்கு நீர் வரும் பாதையை ஆய்வு செய்த எம்.எல்.ஏ..!

Byவிஷா

Nov 6, 2023

மதுரை மாவட்டத்தில் உள்ள வண்டியூர் தெப்பக்குளத்திற்கு நீர் வரும் பாதையை பூமிநாதன் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார். மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 49 வது வார்டு வைகை தென்கரை ஓரம் உள்ள வாய்க்கால்களை சுத்தம் செய்து தெப்பக் குளத்திற்கு தண்ணீர் செல்லும் பணியை இன்று காலை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் கால்வாய்களில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும்படி சட்டமன்ற உறுப்பினர் அறிவுரை வழங்கினார். உடன் மாமன்ற உறுப்பினர் அபுதாகிர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், மாநகராட்சி ஊழியர்கள் இருந்தன.