• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

கர்னல் சோஃபியா குரேஷை விமர்சித்த அமைச்சர்..,

ஆபரேஷன் சிந்துரில் முன்னணியில் இருந்த கர்னல் சோஃபியா குரேஷை
தீவிரவாதிகளின் சகோதரி என விமர்சித்த மத்திய பிரதேசம் அமைச்சருக்கு காங்கிரசார் கண்டனம் தெரிவித்தனர்.

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்துர் நடத்தப்பட்டது. இதில் முன்னணியில் இருந்த கர்னல் சோஃபியா குரேஷை மத்திய பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷா ‘தீவிரவாதிகளின் சகோதரி’ என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. “நம் சகோதரிகளின் குங்குமத்தை அழித்த தீவிரவாதிகளுக்கு, அவர்களின் சகோதரியை வைத்தே மோடி பாடம் புகட்டினார்” என்று அவர் கூறினார்.

ஷா பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி, அமைச்சரின் இந்த கருத்தை பாஜக ஏற்கிறதா என கேள்வி எழுப்பினார். பின்னர் விஜய் ஷா தனது கருத்தை திருத்தி, “அவர்கள் நம் சகோதரிகள், என் பேச்சை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்” என்று கூறினார்