மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 66 வது வார்டு மேல கால் மெயின் ரோடு கோச்சடை முத்தையா சாமி கோவில் தெரு மெயின் ரோட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு அன்பு தான் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய சாலைகள் அமைக்கப்பட்டது.

அதற்குள் ஆங்காங்கே மிகப்பெரிய ராட்சச பள்ளங்கள் விழுந்து உயிர்பலி வாங்க காத்துக் கிடக்கிறது. கோச்சடையில் இருந்து மேல கால் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் இது போன்ற நிலைகள் காணப்படுகிறது. பகல் நேரங்களில் பலர் பள்ளங்களை கவனிக்காமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் முதல் காரில் செல்பவர்கள் வரை பள்ளத்தில் விழுந்து தான் செல்கிறார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் அதில் கீழே விழுந்து காயமும் ஏற்படுகிறது.
புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு இரண்டு மாதங்களை ஆகிய நிலையில் இது போன்ற தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் உயிர்பலி வாங்குவதற்கு முன்பாக அப்பகுதியில் சேதம் அடைந்துள்ள சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது. மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து உயிர் பலி வாங்குவதற்கு முன்பு நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி எழுப்புகின்றனர்.





