மதுரை மாவட்டம் சோழவந்தானில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் போது பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த கோரியும் சோழவந்தான் பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வலியுறுத்தியும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த சிப்காட் தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தியும் சுகாதார மற்றும் தெருவிளக்கு சோழவந்தான் ஆஸ்பத்திரியில் இரவு 8 மணிக்கு மேல் மருத்துவர்கள் இல்லை என்பதை வலியுறுத்தியும் கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.

ஒன்றிய குழு உறுப்பினர் பி பொன்ராஜ் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி பி முருகன் மாவட்ட குழு உறுப்பினர் ஏ வேல்பாண்டி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.




