• Fri. Apr 18th, 2025

துரத்தி துரத்தி வேட்டையாடிய சிறுத்தை!!

ByG. Anbalagan

Apr 13, 2025

குன்னூர் எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வளர்ப்பு நாய்களை துரத்தி துரத்தி வேட்டையாடிய சிறுத்தை இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பொதுமக்கள் அச்சம். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம்குன்னூர் எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் இரவு நேரத்தில் அடிக்கடி சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் வந்து அங்குள்ள வளர்ப்பு நாய்களை வேட்டையாடி செல்வது வழக்கமாகவே உள்ளது இப்பகுதி மக்கள் பலமுறை கிராம சபா கூட்டத்தில் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ள நிலையில் வனத்துறை அலட்சியம் காட்டி வருவதாகவும் நேற்று இரவு இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை இரண்டு மணி நேரத்திற்கு மேல் அந்தப் பகுதியிலேயே சுற்றித்திரிந்து வளர்ப்பு நாய்களை துரத்தி துரத்தி வேட்டையாடி எடுத்துச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்ததோடு சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.