• Thu. Apr 25th, 2024

சர்வதேச போட்டிகளில் 23,000 ரன்களை கடந்த கோலி

By

Sep 2, 2021 , ,

விராட் கோலி தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 23000 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து-இந்தியா இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனால், இந்திய அணி பெட்டிங் செய்து வருகிறது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (11) மற்றும் லோகேஷ் ராகுல் (12) ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார்.

இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 18 வது ஓவரின் கடைசி பந்தை வீச அந்த பந்தை விராட் பவுண்டரி அடித்து தனது சர்வதேச வாழ்க்கையில் 23,000 ரன்களை கடந்தார். விராட் கோலி சர்வதேச போட்டியில் 490 இன்னிங்ஸ்களில் அதிவேகமாக 23,000 ரன்களை எட்டி உலக சாதனை படைத்தார். கோலி சாதனையை இதற்கு முன் யாராலும் முறியடிக்க முடியவில்லை. சச்சின் டெண்டுல்கர் 522 இன்னிங்ஸ்களிலும், ரிக்கி பாண்டிங் 544 இன்னிங்ஸ்களிலும் 23,000 ரன்களை கடந்துள்ளனர்.

விராட் கோலி டெஸ்ட் போட்டியில் 7,689 ரன்களும், ஒருநாள் போட்டியில் 12,169 ரன்களும், டி20 போட்டியில் 3159 ரன்களும் எடுத்துள்ளார். தற்போது இந்திய அணி 25 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 54 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் கோலி 18*, ஜடேஜா 2 * ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *