• Tue. Feb 18th, 2025

பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் ஹர்விந்தர் சிங் அசத்தல்

பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கல பதக்கம் வென்றார்.

டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் வில்வித்தை அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். வெண்கலப் பதக்கப் போட்டியில் ஹர்விந்தர் சிங், தென் கொரியாவின் கிம் மின் சூவை வீழ்த்தியுள்ளார்.

வில்வித்தையில் வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி, பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் பதக்கங்களை வீரர், வீராங்கனைகள் வென்றுள்ளனர்.