• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் 150-ஐ தாண்டியது ஒமைக்ரான் தொற்று பாதிப்பு

Byமதி

Dec 20, 2021

உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது ஒமைக்ரான் தொற்று. உலக நாடுகள் அனைத்தும் என்ன செய்வதென்ன என தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளது.

இந்தியாவிலும் நாளுக்கு நாள் ஒமைக்ரான் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கர்நாடக, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

முதன் முதலில் ஒமைக்ரான் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள டாக்டர் உள்பட 2 பேருக்கு கண்டறியப்பட்டது. இந்நிலையில், இந்தியா முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 150ஐ தாண்டியுள்ளது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.

மகாராஷ்டிராவில் 54, தலைநகர் டெல்லி 22, தெலுங்கானா 20, ராஜஸ்தான் 17, கர்நாடகா 14, குஜராத் மற்றும் கேரளா 11, ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா ஒன்று என மொத்தம் 153 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் பாதிப்புக்கு உள்ளான 54 பேரில் 22 பேர் மும்பையில் கண்டறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.