

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றது.
இந்த தொடரின் முதல் போட்டியில் தென் கொரியா அணியை 2-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி டிரா செய்தது. அடுத்து வங்கதேசத்துடன் மோதிய இந்திய அணி 9-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், நேற்று ஜப்பானுடன் நடைபெற்ற போட்டியில், துவக்கம் முதலே இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா 6-0 என்ற கணக்கில் ஜப்பானை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. இத்தொடரில் இந்தியா பெறும் 3வது வெற்றி இதுவாகும்.
4 போட்டிகளில் விளையாடி இந்தியா அணி 3 வெற்றி மற்றும் ஒரு டிரா என 10 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.