• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல..

ByK Kaliraj

Sep 15, 2026

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது.

இடையில் ஏற்பட்ட சில சருக்கல்கள், கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது.

தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது.

இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும்,

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்.

எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள்.

தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும்.

முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் அந்த நிலைப்பாட்டில் வாழக்கூடியவராக இன்றைய தமிழக முதல்வர் இருக்கவில்லை. முதல்வரின் லண்டன் பயணத்தை சந்தேக கண்ணோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.

வெளிநாட்டில் முதலீடை ஈர்க்க சென்றுள்ள முதல்வர், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் சென்றாலும் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வெற்றிகரமாக திரும்பினால் சந்தோஷம்.

ஆனால் முதல்கட்டமாக ஊடகத்தில் வந்த செய்திகளை பார்க்கும்போது முதல்வர் வெளிநாடு சென்ற நோக்கமே வேறாக தெரிகிறது.

மக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து சில பணிகளை செய்வதாக கேள்விப்படுகிறோம்.

மொத்தத்தில் முதல்வர் தடம் மாறி, தடம் புரண்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள், இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும்.

தமிழக முதலமைச்சராக வந்த பின்னர், அனைத்து முதலமைச்சர்களும் முதல்வர்களுக்கான பண்போடும், தகுதியோடும், தன்மையோடு வாழ்ந்துகொண்டு தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள்

அதேபோல் விஜயும் முதல்வருக்கான பண்போடும், தகுதியோடும் தன்மையோடும் வாழ்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டோடு முதல்வர் விஜய்யின் ஆட்சியும் அவரது செயல்பாடும் இருக்கிறது.

முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.

தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி

காவல்துறையினர் மானிய கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது, எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதல்வர் விஜய் அவருக்கே தெரிந்த பாணியில் வசனத்தை பேசி பதில் உரையை முடித்து விட்டார்.

முதல்வர் விஜயின் பதிலுரை பார்ப்பதற்கு வேண்டுமானால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஜோக்காகவும் இருக்கலாமே தவிர
நல்ல விவரம் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் முதல்வர் விஜயின் பேச்சை எள்ளி நகையாடுகிறார்கள்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை.

காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னேற்ற அறிவிப்புகளும் காவல்துறை மானிய கோரிக்கையில் வரவில்லை.

இதை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சங்கடத்துடன் வாழ்வதை காண முடிகிறது.

தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற காவல் துறைக்கு எந்தவிதமான அறிவிப்புகளோ சலுகைகளோ வழங்கப்படாததை தமிழக மக்கள், காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளவில்லை.

மொத்தத்தில் பிறரை ஏளனமாக பேசுவதற்கும், தமக்கு பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கும் சட்டமன்றத்தை ஒரு கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்திக்கொண்டார்.

எடப்பாடி பழனிச்சாமி ஆண்ட காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தின் புனிதத் தன்மை காக்கப்பட்டது.

தற்போது சட்டமன்றத்தின் புனிதத் தன்மை குறைந்து பாலாகிவிட்டது,

இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வர் விஜய் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணி செய்ய விரும்பவில்லை.

தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது.

ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மத்திய அரசின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோமே தவிர தவெகாவின் தலைவரை பிடித்தோ, தவெகவின் கொள்கையை பிடித்தோ ஆதரவு கொடுக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சொல்லிவிட்டார்கள்.

தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நிலையான ஆட்சியமைக்கும் தன்மை முதல்வர் விஜய்கோ, தவெக கட்சிக்கோ கிடையாது.

ஆட்சி நிலைக்க முதல்வர் விஜய் தனது நிலைய மாற்றிக்கொள்ள வேண்டும்.

பிறரை பழி வாங்குவதற்கோ, பிறரை இகழ்ந்து, புகழ்ந்து பேசுவதற்கோ, தன்னை புகழ்ந்து பேசுவதற்கோ சட்டமன்றத்தை கருவியாக பயன்படுத்த நினைத்தால் தமிழக மக்கள் காலப்போக்கில் தூக்கி எறிந்து விடுவார்கள் இதற்கு ஆதரவு தர மாட்டார்கள்.

தமிழக மக்கள் எப்பொழுதும் முழிப்போடும் இருக்கக்கூடியவர்கள், தமிழக மக்களும், தமிழ் அறிஞர்கள், அரசியல் அறிந்தவர்கள் எள்ளி நகையாட கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம்.

இந்த நிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்றம் தனி சிறப்போடு இயங்க வேண்டும்.

சட்டமன்றத்தில் இன்றைக்கு என்ன பாடல் பாடப்போகிறார்கள், யார் பாடப் போகிறார்கள் என பட்டிமன்றம் போல் செயல்படும் சட்டமன்றத்தின் நிலையை மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், முதல்வர் விஜய் அதனை மாற்றுவாரா என்றால் அது கேள்விகுறியாகவே இருக்கிறது.