• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 பதக்கங்கள் பெற்றுள்ள கல்லூரி மாணவி மாலதி..,

ByK Kaliraj

Sep 16, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல் குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகள் மாலதி பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார் .

துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.

சென்னையில் உள்ள சிவந்தி ஆதித்தனார் ஷார்ட்கான் பயிற்சி மையத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோடு ரைபிள் அகாடமி சார்பில் நடத்தப்பட்ட துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 பதக்கங்கள் பெற்றுள்ளார்.

தென்காசியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று வெங்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.

இவருக்கு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவிக்கு மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி வாங்குவதற்கு தேவையான நிதி உதவி வழங்க வேண்டும் என மாணவியின் சார்பில் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.