• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… மக்கள் அதிர்ச்சி!!

ByA.Tamilselvan

Dec 21, 2022

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5 ஆயிரத்தை தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதிலும் சில நாட்கள் சவரனுக்கு ரூ.37,000 வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து வந்தனர். அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் 40,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.400 உயர்ந்து ரூ.40,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 5,115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் 20 காசுகள் அதிகரித்து ரூ.74.70 காசுகளுக்கும், கிலோவுக்கு ரூ.2,200 உயர்ந்து 74,700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.