

2007ம் ஆண்டு அறிமுகமான முதல்தலை முறை ஐபோன் அமெரிக்காவில் ரூ28 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. தற்போது ஐபோன்களின் முன்னோடியான இதில் 2mpகேமரா, எல்சிடி திரை.4ஜிபி-8ஜிபி மெமரியை கொண்டது. தற்போது ஐபோன் 13 வரை நவீன மாடல்கள் வந்துவிட்டதால் பழைய ஐபோன்கள் மெல்ல வழக்கொழிந்து வருகின்றன. இந்த நிலையில் சீல் பிரிக்கப்படாத இந்த முதல் தலைமுறை ஐபோன் இவ்வளவு பெரிய தொகைக்கு எலம் போயிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
