

இன்று 70வது பிறந்த நாள் காணும் விஜயகாந்துக்கு – விஜய் எழுதிய பழைய கடிதத்தை வைரலாக்கும் ரசிகர்கள்
நடிகர், அரசியல் தலைவர் விஜயகாந்துக்கு இன்று 70 வது பிறந்தநாளாகும். அரசியல் தலைவர் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் விஜய் எழுதிய பழைய கடிதம் வைரலாகி வருகிறது.விஜயகாந்த் மீது தனி பாசம் கொண்டுள்ள விஜய் அவரை அண்ணா என்றே அழைத்து வருகிறார். இந்நிலையில் விஜயகாந்துக்கு விஜய் எழுதிய அந்த கடிதத்தில் “அண்ணா உங்கள் அன்புக்கு நான் அடிமை” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை வைரலாக்கி விஜய் ரசிகர்கள் விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
