ஆந்திராவில் உயிரிழந்த மகன் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல், 90 கிலோ மீட்டர் தூரம் வரை இருசக்கர வாகனத்தில் தந்தை தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, இது இதயத்தை ரணமாக்குவதாக குறிப்பிட்டுள்ளார். அதில், திருப்பதி ருயா மருத்துவமனையில் உயிரிழந்த ஜெசவா என்ற சிறுவனின் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருமாறு அவனது தந்தை மன்றாடியும் ஒருவரும் உதவ முன்வரவில்லை என சந்திரபாபு வேதனை தெரிவித்துள்ளார்.