பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும்.. தேர்வு தள்ளிப் போகாது,” என,
பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னையில் சேப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்ட அவர், தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன. வாரத்தின் ஆறு நாட்களும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த, பள்ளி கல்வித் துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா; தள்ளிப் போகுமா என்ற சந்தேகம் இருந்தது.
இந்நிலையில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதால், திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தெரிவித்தார்.