• Fri. Mar 29th, 2024

நாளை 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிகிறது

ByA.Tamilselvan

May 12, 2022

1 முதல் ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையோடு இறுதி தேர்வு முடிவுக்கு வருகிறது.
2 வருடத்திற்கு பிறகு பள்ளி சிறுவர்கள் இந்த வருடம் ஆண்டு இறுதித்தேர்வு எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டது
10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 31-ந்தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன.மாநில அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு கடந்த 5-ந்தேதி முதல் ஆண்டு இறுதி தேர்வு தொடங்கியுள்ளது.
1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். மற்ற நாட்களில் வரத்தேவை இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
நாளை (13-ந்தேதி) கடைசி வேலை நாளாகும். நாளையுடன் தேர்வுகள் முடிகின்றன. 14-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு ஜூன் 13-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.. நாளையுடன் தேர்வு முடிவதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு மாதம் கோடை விடுமுறையை கொண்டாடுவதில் ஆர்வமாக உள்ளனர். 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாத இறுதி வரை தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *