• Fri. Mar 29th, 2024

ஒழுங்கீனமாக செயல்படும் மாணவர்களுக்கு டீசி… பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு…

Byகாயத்ரி

May 12, 2022

மாணவர்கள் பள்ளிகளில் ஒழுங்கீனமாக செயல்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் “மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ தொந்தரவு தந்தால் பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள். மேலும் டிசியில் மாணவர்களின் நன்னடத்தை என்கின்ற பிரிவில் என்ன காரணத்துக்காக அந்த மாணவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து தெரிவிக்கப்படும். அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்று தெரிவித்திருந்தார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சரின் இந்த கருத்து சரியல்ல என பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் பள்ளியில் தவறு செய்தால் அவர்களை திருத்த வேண்டும். மாணவர்களை பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது அவர்களின் எதிர்காலத்தை அழித்துவிடும். தவறாக நடந்து கொள்ளும் மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்குவது அவர்களுடைய தற்போதைய வாழ்க்கையில் எந்த வகை மாற்றத்தையும் கொண்டுவராது. மேலும் டிசி மற்றும் நன்னடத்தை சான்றிதழ் உடன் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டால், மாணவரின் எதிர்காலம் வீணாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *