திமுக புதிதாக எந்த ஒரு சாதனையும் செய்யவில்லை என மதுரையில் நடைபெற்ற அதிமு.அமைப்பு தேர்தலில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி
அதிமுக அமைப்பு தேர்தல்மூன்றாம் கட்டமாக நடைபெற்று வரக்கூடிய வேளையில் ஜனநாயக முறைப்படி தற்போது மதுரை மாநகர் மாவட்ட கழகத்திற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது
தேர்தல் பொறுப்பாளராக முன்னாள்அமைச்சர் வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரானகே.பிகந்தன் மற்றும் கழக புரட்சித்தலைவி பேரவை துணைச் செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகரன் ஆகியோர் தலைமை கழகம் மூலமாக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டள்ளனர்
இதில் பல்வேறு பதவிகளுக்காக கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு அளித்து வருகின்றனர்
மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அவைத்தலைவர் இணைச் செயலாளர் துணைச் செயலாளர் பொருளாளர் பொதுக்குழு உறுப்பினர் உட்பட 10 பதவிகளுக்கு இன்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
சென்னையில் சட்டமன்ற கூட்டம் நடைபெறுவதால் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் பதவிக்கான விருப்பம் அளவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வின் மருமகன் கணேஷ் தாக்கல் செய்தார் தொடர்ந்து கட்சியின் பிறப்புறுப்புகளுக்கு விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வருகின்றனர்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுகையில் ஆளும் கட்சியை போல மிக வேகமாக சுறுசுறுப்பாக ஜனநாயக முறைப்படி இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது,கழக அமைப்புத் தேர்தல் தலைமை கழக அறிவிப்பின்படி சிறப்பாக நடைபெற்று வருகிறது.மாவட்டச் செயலாளர் பதவிக்கு விருப்பம் மனு பெறப்பட்டு வருகிறது.பெறப்பட்ட விருப்பம் மனுக்களில் ஒருங்கிணைப்பாளர்கள் இறுதியாக யாருக்கு என்ன பதவி என்பதை முடிவு செய்வார்கள் என்றார்.
மேலும் அவர் பேசுகையில்…
11 மாத திமுகவின் ஆட்சி கால கட்டத்தில் அம்மா அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை முழுமையாக நிறுத்தி வேறு பெயரைச் சூட்டி இவர்கள் தங்களுடைய செல்வாக்கை நிரூபித்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.திமுகவினர் புதியதாக எந்த ஒரு சாதனையையும் கொண்டு வரவில்லை.
சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில்
சமீபத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தீர்ப்பு வந்திருக்கிறது வெட்ட வெளிச்சமாக அதிமுகவில் யார் பொறுப்பானவர்கள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற கட்டளைகளை எல்லாம் நீதிமன்றம் தீர்ப்பு மூலம் வழங்கியிருக்கிறது.எனவே அவர் குறித்து பேசுவதற்கு வழியில்லை என்றார்.மேலும்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எந்த இடத்தில் கட்டிடத்தை கட்டி அதிமுக கட்சி இருக்க வேண்டும் என்று சொன்னார்களோ அங்கேயேதான் அதிமுக இருக்கிறது வேறு எங்கும் அதிமுக செல்லவில்லை புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அம்மா அவர்களுக்கு பிறகு இபிஎஸ் ஓபிஎஸ் அவர்களுடைய தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள் பொது மக்களை பாதிக்கின்ற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதற்காக நிச்சயம் அதிமுக போராட்டம் நடத்தும்தற்போது கழக அமைப்புத் தேர்தல் ஜனநாயக முறைப்படி வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது
என்றார்
திமுக ஆட்சி புதியதாக எந்த ஒரு சாதனையையும் கொண்டு வரவில்லை-முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி
