துப்புரவு பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தில ஈடுபட உள்ளதாக அறிவிப்பு
மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அன்பு தேவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;
தமிழகம் முழுவதிலும் உள்ள 19 துப்புரவு தொழிலாளர் சங்கங்களை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பெற்று தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக்கபபட்டு உள்ளது.இந்த நிலையில் தேனி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி கிராம பஞ்சாயத்தில் ஆதிக்க சாதியினர், திமுக கட்சியினர் சிலர் தூய்மை பணியாளர்களை சாதி பெயரை சொல்லி இழிவு செய்கின்றனர்.
தொடர்ந்து ஊராட்சித் தலைவர்களுடன் செயல் அலுவலர்கள் ஒத்துழைப்புடன் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.மேலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சில ஒப்பந்ததாரர்கள் அரசு விதித்து இருக்கும் சம்பளமும் முறையாக வழங்கப்படுவதில்லை.அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் போராடினால் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. ஆனால் எங்களின் கோரிக்கை நீண்ட நாளாக கிடப்பில் வைக்கப்பட்டு உள்ளது. அதனை வெளிப்படுத்தும் விதமாக மாநிலம் தழுவிய துப்புரவு பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்லாயிரக்கணக்கான தூய்மை பணியாளர்களை ஒருங்கிணைத்து பேரணி மற்றும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
தூய்மைபணியாளர்களை ஜாதிப்பெயரை சொல்லித்திட்டும் திமுகவினர் – அன்பு வேந்தன் பளிச் பேட்டி
