• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

விக்கிரமங்கலம் அருகே ஊரணியில் செத்து மிதக்கும் மீன்களால் தொற்றுநோய் பரவும் அபாயம்..,

ByKalamegam Viswanathan

Jul 24, 2026

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கல்புலிச்சான் பட்டி ஊரணியில் கடந்த மூன்று நாட்களாக மீன்கள் செத்த மிதந்து கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் கூறியும் செத்து கிடக்கும் மீன்களை சுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். மூன்று நாட்களுக்கு மேலாக துர்நாற்றம் வீசி வரும் மீன்களால் புற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அருகிலேயே அரசு துவக்கப்பள்ளி உள்ள நிலையில் ஊரணியில் செத்து கிடக்கும் மீன்களை உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் பள்ளி மாணவர்களின் உடல் நலம் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.