• Fri. Apr 26th, 2024

இந்திய அளவில் தூய்மையான விமான நிலையங்களில் மதுரை

ByA.Tamilselvan

May 24, 2022

இந்தியாவில் உள்ள 34 விமான நிலையங்களில் தூய்மையான விமான நிலையங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது
மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தப்படும் தேவை ஏற்படும் பட்சத்தில் தென்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமானத் துறை அமைச்சரை நேரில் சந்திப்பது என முடிவு செய் யப்பட்டுள்ளது. மதுரை விமானநிலைய விமான நிலைய ஆலோச னைக்குழுக் கூட்டம் திங்களன்று ஆலோசனைக்குழுத் தலைவர் மாணிக்கம்தாகூர் எம்.பி தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கலந்துகொண்டார் .கூட்டத்தில் மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலமெடுப்புப் பணிகள் 95 சத வீதம்நிறைவு பெற்றுள்ளது. நீர்நிலை இடங்கள் வகை மாற் றம் குறித்து தமிழக அரசு உத்தரவுகளை வெளியிட வேண்டி யுள்ளது. இப்பணியை அரசு விரைவில் முடிக்க வேண்டும். விமான நிலைய விரிவாக்கத்தில் புதிதாக ஐந்து விமான நிறுத்துமிடங்கள், இரண்டு ஹெலிபேடுகள், ஒரு கூடுதல் பயணிகள் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கேற்ப வாகன நிறுத்தம், பேருந்து வசதிகள் மேம்படுத்தப்படும். இந்தியாவில் உள்ள 34 விமான நிலையங்களில் தூய்மையான விமான நிலையங்களில் முதலிடத்தையும், பயணிகள் சேவைத்தர மதிப்பீட்டில் இந்திய விமான நிலை யங்களில் நான்காவது இடத்தையும் மதுரை விமான நிலை யம் பெற்றுள்ளது. இதற்கான அதிகாரிகள், ஊழியர்கள் பாராட்டப்பட்டனர் என செய்தியாளர்களிடம் மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்தார், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், காவல்துறை அதிகாரி தங்கதுரை, விமான நிலைய அதிகாரி பாபுராஜ், ஆலோச னைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *