• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவில்பட்டியில் கர்மவீரர் காமராஜர் சிலை திறப்பு விழா..,

ByK Kaliraj

Jul 24, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கோவில்பட்டியில் கர்மவீரர் காமராஜர் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர், தொழிலதிபர் லெஜெண்ட்ஸ் சரவணன் கலந்து கொண்டு காமராஜர் சிலையை திறந்து வைத்த பேசியது.

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் பல்வேறு அணைகள் கட்டி விவசாயத்தை செழிக்க வைத்து விவசாயிகளின் காவலனாக அணைகளின் அரசனாக மக்கள் போற்றி வருகின்றனர்.

படிக்காத மேதையாக இருந்தாலும் பல்வேறு தொழிற்சாலைகளை உருவாக்கியவர் அவரது சிலையை திறந்து வைப்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என கூறினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி நாடார் உறவின் முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.