விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட தனி படையை சேர்ந்த ஆலங்குளம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் காளிராஜ், ஆகியோர் தலைமையில் போலீசார் தாயில்பட்டி, கலைஞர் காலனி, அண்ணா காலனி, எஸ்.பி.எம்.தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் அதிரடியாக நடத்தினார்.

எஸ்.பி.எம். தெரு பகுதிகளில் நடத்திய சோதனையில் தியாகராஜன் (வயது58) என்பவரது வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்க பட்டது தெரிய வந்தது.அங்கு தயார் செய்து மூன்று பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 30 கிலோ சோல்சா வெடிகள், மற்றும் மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்து தியாகராஜனை கைது செய்தனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள இனாம் மீனாட்சிபுரத்தில் பட்டாசு ஆலை பின்புறம் சட்டவிரோதமாக தகர செட்டில் பட்டாசுகள் தயாரிப்பதாக அச்சங்குளம் கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சோதனை நடத்தியதில் சட்டவிரோதமாக கருந்திரிகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் கமல் அறையில் வைத்திருந்த 50 குரோஸ் கருந்திரி ஐந்து பண்டல்கள் மற்றும் சோல்சா வெடிகள், மூலப் பொருட்களையும், பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் தகர செட்டின் உரிமையாளர் வெம்பக்கோட்டையை சேர்ந்த பெண் பூமணி (வயது 48) ,இனம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த குமரேசன் (வயது 48) ,வி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ஜெகதீச பெருமாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்




