• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வு கசிவு விவகாரம் டெல்லியில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByP.Thangapandi

Jul 24, 2026

டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்து வரும் சூழலில்.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் மதுரை மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமையில் நிர்வாகிகள் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,

இதில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்,கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும், மத்திய அரசு மற்றும் கல்வி அமைச்சரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,