• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ரயில்வே ஊழியர்கள் மோதல் – 4 பேர் சஸ்பெண்ட்

ByA.Tamilselvan

May 23, 2022

மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இரண்டு தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே மோதல் – 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் பகுதியில் செயல்பட்டு வரும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் அலுவலகத்தில் பணியாற்றும் தெற்கு ரயில்வே எம்பிளாயிஸ் சங்கத்தை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிக்கு பணி இடமாற்றம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இரு தொழிற்சங்க நிர்வாகிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் ரயில்வே ஊழியர்கள் இரு தரப்பினர் களும் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் அளவிற்கு மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் சார்பில் இருதரப்பு இடையே விசாரணை மேற்கொள்ளப்பட்டது இதில் தகராறில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.