• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசு குறை கூறி வருகிறது!- செல்லூர் ராஜு

Byகுமார்

Jan 18, 2022

மாமன்னர் திருமலை நாயக்கரின் 439 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் அதிமுக வின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திருமலை நாயக்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மதுரையில் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தி உள்ளோம். திமுக அமைச்சரவையில் 6 பேர் நாயக்கர் சமுதாயத்தில் இருந்தும் இந்த இடத்திற்கு யாரும் வரவில்லை என்பது மிகப் பெரிய குறைபாடாக உள்ளது. திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசைப் பொறுத்தவரையில் தமிழ் மொழியை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்றுதான் பாரத பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.

இதுவரை இந்தியாவிற்கு எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கிறார்கள்.எந்த பிரதமரும் தமிழர்களின் பெருமையையும் வரலாற்றையும் தமிழர்களின் கலாச்சாரத்தையும் எடுத்துக் கூறியவர் எவரும் இல்லை அதற்கு உரிய பெருமை உள்ளவர் பிரதமர் நரேந்திர மோடி.  சீன பிரதமரை அழைத்து வந்து தமிழகத்தில் சிறப்பு செய்தவர் பிரதமர் மோடி அவரின் அனுமதியில் 11 மருத்துவக்கல்லூரி தற்போது தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது.

தனியார் மருத்துவமனை ஒரு போட்டி போடும் அளவிற்கு அரசு மருத்துவமனை தற்போது உள்ளது.
மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறது. வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியோடு மறைமுகமாக பாஜகவை எதிர்த்து வருகிறது என்று பேசினார்.