• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசைக் கண்டித்து அல்வா கொடுத்த திமுகவினர்

Byவிஷா

Feb 8, 2024

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்காததைக் கண்டித்தும், உரிய வெள்ள நிவாரண நிதியை வழங்காதது குறித்தும் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி தீவிரமான மழை பெய்தது. இதைத்தொடர்ந்து 17, 18ம் தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசியில் கடுமையாக மழை பெய்தது. இது பல லட்சம் மக்களை பாதித்தது. இந்நிலையில் இதை தேசிய பேரிடராக அறிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்படி அறிவிக்க முடியாது என்று தெரிவித்தார். இந்த பாதிப்புகளுக்கு மத்திய அரசு 37,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசு தெரிவித்தது.
ஆனால் மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்கவில்லை இந்நிலையில் திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். அதன்படி நெல்லையில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் பொதுமக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்தனர்.
சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள அனைவருக்கும் அல்வா கொடுத்தனர். அந்த அல்வாவோடு இணைக்கப்பட்ட நோட்டீஸில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி ’ஜீரோ’ என்று எழுதப்பட்டுள்ளது. இதுபோல திருநெல்வேலியிலும் வழங்கப்பட்டது.