• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவ மாணவிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய ஜா. முகமது பர்வேஸ்..,

ByS. SRIDHAR

Jul 3, 2026

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் இலுப்ப குடிப்பட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம்( கோட்டம்,,) புதுக்கோட்டை மண்டலம் சார்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி பேருந்து வழித்தட நீட்டிப்பு வசதியை பரம்பூர், முதல் கீரனூர் வரை செல்லும் பேருந்து வசதியை(வழி) குடுமியான்மலை, கீழக்குறிச்சி,இலுப்பை குடிப்பட்டி வரை நீட்டித்து, (தொட்டு ) தாயினி ப்பட்டி வரை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. கோகுல் சிங் அவர்கள் புதுக்கோட்டை மண்டல மேலாளர் திரு. முகமது நாசர் அவர்கள்,துணை மேலாளர் (வணிகம்) திரு.கார்த்திகேயன் அவர்கள்,இலுப்பூர் வட்டாட்சியர் திரு. சக்திவேல் அவர்கள், மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.