• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

“நியோ ஐடோலா 2026” இலக்கிய மன்றத் துவக்க விழா..,

ByK Kaliraj

Jul 3, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கல்லூரி, ஆங்கிலத் துறை சார்பில் “நியோ ஐடோலா (Neo Idola) 2026” இலக்கிய மன்றத் துவக்க விழா 02.07.2026 அன்று கல்லூரி கூட்ட அறையில் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக, முதுகலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவி விஷால் ஸ்ரீ வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் பெ.கி.பாலமுருகன் அவர்கள் தலைமை வகித்து, ஆங்கில மொழித்திறனின் அவசியத்தையும், ஆங்கிலத் துறை வழங்கும் கல்வி மற்றும் தொழில்முறை வாய்ப்புகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருச்சி, தேசிய தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவரும், முதுகலை ஆங்கிலப் பட்டதாரியும், யூ.பி.எஸ்.சி. தேர்வாளருமான திரு.ஜெயசுதா விக்னேஷ் அவர்கள் கலந்துகொண்டு, “ஆங்கிலத் திறன்: போட்டித் தேர்வில் வெற்றிக்கான திறவுகோல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற சொற்களஞ்சியம், இலக்கணத் துல்லியம், வாசிப்புப் பழக்கம், தகவல் பரிமாற்றத் திறன் மற்றும் நேர மேலாண்மை ஆகியவை இன்றியமையாதவை எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து வாசித்தல், பேசுதல், எழுதுதல் ஆகியவற்றின் மூலம் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்திக் கொள்ளுமாறும் மாணவர்களை ஊக்குவித்தார்.

நிகழ்ச்சியில் 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான நியோ ஐடோலா இலக்கிய மன்றத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். முதுகலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவி விஷால் ஸ்ரீ தலைவராகவும், இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மாணவர் பரம்ஜித் சரவணன் துணைத் தலைவராகவும், மாணவி ராகவி செயலாளராகவும் பொறுப்பேற்றனர். மேலும், ஷர்மிளா மற்றும் அகிலா பானு ஆகியோர் மன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றனர்.

தொடர்ந்து துணை முதல்வர் முத்துலட்சுமி மற்றும் ஆங்கிலத்துறைத் தலைவர.பெமினா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர்களின் கல்வி, தலைமைத்துவம், படைப்பாற்றல் மற்றும் ஆளுமை வளர்ச்சியில் இலக்கிய மன்றத்தின் பங்களிப்பை அவர்கள் எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் மாணவர்கள் போட்டித் தேர்வுகள், ஆங்கில மொழித்திறன் மற்றும் தொழில்வாய்ப்புகள் தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர் விளக்கமளித்தார்.

நிறைவாக, இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மாணவர் பரம்ஜித் சரவணன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் ஆங்கிலத்துறை சார்ந்த 40 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.