சென்னையில் கோட்டையை நோக்கி பெட்ரோல் ,டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பாஜக பேரணிநடத்தி வருகிறது. திமுக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன என பேரணியில் அண்ணாமலை பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக அரசு பெட்ரோல் – டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக போராட்டம்நடைபெற்றது. கடந்த மே 21ம் தேதி நாடு முழுக்க பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் மாநில அரசும் வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பாஜக தற்போது போராட்டத்தை துவக்கி உள்ளது. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டையை நோக்கி பாஜக பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பெட்ரோல் டீசல் விலையை திமுக அரசு உடனடியாக குறைக்க வேண்டும். விடியாத அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மாட்டேன் என்கிறது. பாஜக வாக்குறுதி கொடுக்காமலே இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. கடந்த 3 நாட்களாக திமுக அரசு உதயநிதிக்கு ஆதரவாக தீர்மானம் போட்டு வருகிறது. மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. கோட்டையை நோக்கி நாம் வரப்போகிறோம் என்று தெரிந்ததும் முதல்வர் எஸ்கேப் ஆகிவிட்டார். முதல்வர் எஸ்கேப் ஆகி டெல்டாவை நோக்கி சென்றுவிட்டார். முதல்வர் எங்கே சென்றாலும் பாஜக விடப்போவது கிடையாது,. நீங்கள் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றுதான் கூறுகிறோம். நீங்கள் கொடுக்காத வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்ற சொல்லவில்லை. விடியாத அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இன்னும் இந்தஅரசுக்கு 750 நாட்கள்தான் இருக்கின்றன. நாம் சுவச் பாரத் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் கஞ்சா ஆபரேஷன் செய்து கொண்டு இருக்கிறார்கள். சாதாரண பொதுமக்கள் சாலையில் நடக்கவே பயப்படுகிறார்கள். சாலையிலேயே பட்டப்பகலில் கொலைகள் நடக்கின்றன. சட்ட ஒழுங்கு மோசமாகிவிட்டது.
இன்னும் 4 நாட்களில் பாஜக சார்பாக 2 ஊழல் பட்டியல் வெளியிடப்படும். 2 அமைச்சர்கள் செய்த ஊழல்கள் பற்றி வெளியிடுவோம். விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்துள்ளனர். நிலக்கரியை ஊழல் செய்த அமைச்சர் இருக்கிறார். கண்ணுக்கு தெரியாத மின்சாரத்தில் அமைச்சர் செய்த ஊழல் பற்றி வெளியிடுவோம். காற்றில் என்ன ஊழல்.. கண்ணுக்கு தெரியாத மின்சாரத்தில் ஊழல் செய்தவர்களை பற்றி வெளியிடுவோம், என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன- பேரணியில் அண்ணாமலை பேச்சு
