• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பதவி உயர்வு ஆணையை வழங்கிய கலெக்டர்..,

ByVelmurugan .M

Oct 7, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும், 1 நபருக்கு பதவி உயர்வுக்கான ஆணையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி இன்று (07.10.2025) வழங்கினார்.

              பெரம்மபலூர் மாவட்ட  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ஆக பணிபுரிந்து பணியிடையே  காலமான படகாத்து அவர்களின் மகன் நடராஜன் என்பவருக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் ராமலிங்கபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து  பணியிடையே  காலமான அழகுராஜா  என்பவரின் மகன்  அருண்குமார் என்பவருக்கும், மாவட்ட ஆட்சியரக சத்துணைவு அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் மாவிலிங்கை ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து பணியிடையே  காலமான சரவணன் அவர்களின்  மகன் கார்த்திகேயன் என்பவருக்கு  உதவி இயக்குநர் (ஊராட்சிகள் / தணிக்கை) அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும்  பணிபுரிவதற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 

மேலும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவறை எழுத்தாளராக பணிபுரிந்து வந்த மல்லிகா என்பவருக்கு காலிப் பணியிட மதிப்பீட்டு அறிக்கையின் படி 10 சதவீத ஒதுக்கீட்டின் பேரில் இளநிலை உதவியாளராக பதவி உயர்வுக்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.