அமெரிக்காவில் கடத்தல்காரனிடம் இருந்து தங்கையை காப்பாற்றிய அண்ணனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
அமெரிக்காவில் சமீப காலமாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அல்பெனா நகரைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு ஒரு 13 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்வதால் இரவில் தான் வீடு திரும்புவார்கள். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் பெற்றோர் வரும் வரை குழந்தைகள் இருவரும் படிப்பார்கள் அல்லது விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது ஜோக்கர் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அண்ணன் உடனே பறவைகளை அடிப்பதற்காக வைத்த உண்டிகோல் மற்றும் இரும்பு குண்டுகளை எடுத்து கடத்தல் காரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த திருடன் சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை பாராட்டியதோடு மர்ம நபரையும் பிடித்தனர். மேலும் கடத்தல் காரனை பார்த்து அஞ்சாமல் ஒரே ஒரு உண்டிகோல் உதவியால் தன் தங்கையை காப்பாற்றிய அண்ணனுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.