நீச்சல் குளம் ஒன்றில் மகன் குதிப்பதை கன நேரத்தில் தடுத்து நிறுத்தி காப்பாற்றிய தாய் இணையத்தில் பாராட்டுக்களை வாரி குவித்து வருகிறார். ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு இருக்கும் வீடியோ ஒன்றில், சிறுவன் ஒருவன் நீச்சல் குளத்திற்குள் தாவி குதிக்க முற்படுகிறான். இதை கவனித்த சிறுவனின் தாய் கன நேரத்தில் மிக சாதூர்யமாக செயல்பட்டு, ஒற்றை கையில் மகனை கேட்ச் பிடித்து காப்பாற்றும் பரபர காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ Mother Of The Year எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலர் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை இந்த வீடியோவை சுமார் 4 லட்சத்து 77ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ பல்லாயிரம் லைக்குகளையும் பெற்று இருக்கிறது. சிலர் வீடியோவில் இருவப்பவர் ” Super Mom” என குறிப்பிட்டுள்ளனர். மேலும் சிலர் இதே போன்று குழந்தைகளை தாய்மார்கள் எப்படி எல்லாம் காப்பாற்றி இருக்கிறார்கள் என்பதை கூறும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். “இதனை நம்ப முடியவில்லை. எனக்கு மூட நம்பிக்கை இல்லை. ஆனால் அனைத்து தாய்மார்களுக்குள் சூப்பர் ஹியுமன் செயல்திறன் நிச்சயம் உள்ளது. அதுவும் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர்களால் அமைதி காக்க முடியாது.” என இந்த வீடியோவை பகிர்ந்த நபர் ஒருவர் குறிப்பிட்டு இருக்கிறார்.