• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இலங்கை மக்களுக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி..

Byகாயத்ரி

May 4, 2022

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிகள் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட மு.க.ஸ்டாலின் தி.மு.க. சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கப்படும் எனவும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் எனவும் தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முன் வந்துள்ளார். இலங்கை மக்களுக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை டுவிட்டரில் இன்று விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தே.மு.தி.க. சார்பில் முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.