தேசிய விளையாட்டு தினத்தில், லீ ஷாலின் குங்ஃபூ அகாடமியை சேர்ந்த மாணவன், சேலம் களரம்பட்டியை சேர்ந்த 7 வயது சிறுவன் தருண் 2 வது முறை உலக சாதனையாக கண்களைக் கட்டிக்கொண்டு 5 நிமிடம் 20 வினாடிகளில் 500 கராத்தே ஹிட்ஸ் செய்து உலக சாதனை படைத்தார்.
ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக அறிவித்து சான்றிதழ், பதக்கம் வழங்கியது. சிறப்பு அழைப்பாளராக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி அவர்கள் கலந்து கொண்டு சிறுவனுக்கு ஊக்கத்தொகை வழங்கி உற்சாகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.அன்வர், கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர், பனமரத்துப்பட்டி ராஜா,சிவா, பயிற்சியாளர் ரவிக்குமார், ஜிம் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்