• Fri. Apr 26th, 2024

ஐபிஎல் கொண்டாட்டம் ஆரம்பம்!!! துபாய்க்கு சென்ற ஆர்.சி.பி அணி …

By

Aug 30, 2021 , ,

இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி நிர்வாகிகள் என பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதித்ததே இதற்கு காரணம். பின்னர் எப்போது ஐபிஎல் நடைபெறும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து, மீதமுள்ள ஆட்டங்கள் செப்ம்டபர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

இதில் பங்கேற்பதற்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் இன்று துபாய் புறப்பட்டு சென்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவைச் சேர்ந்த இந்திய வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் ஆகஸ்ட் 21 முதல் பெங்களூருவில் தனிமையில் இருந்தனர். துபையில் இறங்கியவுடன் 6 நாள்களுக்கு மீண்டும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இதன்பிறகே, அந்த அணி பயிற்சியைத் தொடங்க முடியும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை செப்டம்பர் 20ஆம் தேதி அபுதாபியில் எதிர்கொள்கிறது. புள்ளிகள் பட்டியலில் 5 வெற்றிகள், 2 தோல்விகளுடன் பெங்களூரு அணி தற்போது 3ஆவது இடத்தில் உள்ளது.

ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்சன், பின் ஆலென் மற்றும் ஸ்காட் குக்லெயின் ஆகியோர் மீதமுள்ள ஆட்டங்களில் விளையாடாததால் அவர்களுக்குப் பதில் இலங்கையின் ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, சிங்கப்பூரின் டிம் டேவிட் மற்றும் இங்கிலாந்தின் ஜார்ஜ் கார்டன் ஆகியோர் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *