• Fri. Apr 26th, 2024

இதுவே முதல் முறை.. இந்தியாவை தலைநிமர வைத்த தங்க மங்கை!


டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு வெள்ளி பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

பாரா ஒலிம்பிக் போட்டியில் சற்றுமுன் நடைபெற்ற 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அவானி லெகாரா தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவுக்கு பாரா ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் கிடைத்த முதல் தங்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வீராங்கனை அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


கடந்த 2012ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தின் காரணமாக முதுகு தண்டுவடப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சில ஆண்டுகள் சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் 2017 ஆம் ஆண்டு சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் அவானி பங்கேற்றார். இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கண்டிப்பாக தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. போலவே தங்கத்தை அவானி இப்போது உறுதி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தியாவின் பவினா பட்டேல் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளி வென்ற உள்ளார் என்பதும், இந்தியாவின் நிஷாத் குமார் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்று உள்ளார் என்பதும், இந்தியாவின் வினோத்குமார் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்று உள்ளார் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *