காஸ்மீரில் பணியின் போது உயிரிழந்த குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்த ராணுவவீரரின் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் தகனம்,மாவட்ட ஆட்சியர் ,எஸ்பி மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த அண்டூர் புல்லை பகுதியை சேர்ந்தவர் 48வயதான கிருஷ்ணபிரசாத் ,இவர் காஷ்மீர் எல்லையில் ராணுவவீராக பணியாற்றிவருகிறார் இந்நிலையில் நேற்று அதிகாலையில் பயணியிலிருந்தபோது கிருஷ்ணகுமார் எதிர்பாராதவிதமாக மயங்கிவிழுந்து உயிரிழந்தார் அதை தொடர்ந்து அவரது உடல் நேற்றிரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் பாங்கோடு ராணுவ மையத்திற்கு கொண்டுவரபட்டது
அங்கு கேரளா முதல்வர் பினறாயி விஜயன் மரியாதை செலுத்தினார் அதை தொடர்ந்து இன்று காலையில் கிருஷ்ண பிரசாத்தின் சொந்த ஊரான அண்டூரில் கொண்டுவரபட்டது அங்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனன்,டெப்டனன்ட் கெர்னல் அன்சாரி சாபு உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் அதை தொடர்ந்து 21குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யபட்டது ,உயிரிழந்த ராணுவ வீரர் கிருஷ்ணபிரசாத்துக்கு சௌமியா என்ற மனைவியும் 7வகுப்பு 5வகும்பு படிக்கும் இருமகன்களும் உள்ளனர் .