• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

‘நரேந்திர மோடி நிலையம்’ என தனது வீட்டுக்கு பெயர் சூட்டிய பாஜக தொண்டர்-நாளை மறுநாள் புகுமனைபுகுவிழா

ByA.Tamilselvan

May 1, 2022

கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் தான் கட்டிய வீட்டுக்கு ‘நரேந்திர மோடி நிலையம்’ பெயரை சூட்டியுள்ளார். மோடி நிலையத்தின் வீடு,மற்றும் தொண்டரிலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரியைச் சேர்ந்தவர் ஹாலேஸ் (56). பாஜக தொண்டரான இவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். இந்நிலையில் தனது நிலத்தில் புதிய வீடு ஒன்றை கட்டினார். அந்த வீட்டுக்கு ‘நரேந்திர மோடி நிலையம்’ என பெயர் சூட்டியுள்ளார். மேலும் முகப்பு கல்வெட்டில் மோடியின் முகத்தை பொறித்து வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த வீட்டின் புகுமனைபுகு விழா வரும் 3-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருக்கிறது திறப்பு விழா அழைப்பிதழை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோருக்கு ஹாலேஸ் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்படித்தக்கது.