இலங்கையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சேமே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்
பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு எதிராக 1 மாதத்திற்கு மேலாக ஆங்கு போராட்டங்களும் ,மறியல்கள் நடைபெற்று வருகின்றன.பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் ராஜபக்சே தான் காரணம் என கூறி அவரை பதவி விலகும்படி அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கடந்த சில தினங்களுக்க முன் கூட ராஜபக்சே பதிவி விலக உள்ளதாகவும்,புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சே மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்கும் அயராது உழைக்கும் மக்களுக்கு மே தின வாழ்த்துகள். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.