• Thu. Apr 18th, 2024

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கம் – அமைச்சர் சிவி. கணேசன்

புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்பயிற்சியை அறிமுகப்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதே தமிழக அரசின் நோக்கம் என சிவகங்கையில்
திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி. கணேசன் பேட்டி.

சிவகங்கையில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் நலன், மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார். மேலும், தமிழகத்தில் தொழிற் பயிற்சி நிலையங்களின் உள்கட்டமைப்பு விரைவில் மேம்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

தற்போது தமிழகத்தில் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், 25,000 மாணவர்கள் படித்து வருவதாகவும், அதனை 50,000 என அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதே தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் கனவாக உள்ளது என்ற அமைச்சர், கிராமப்புறங்களில் அதிக வேலைவாய்ப்பை தரும் தொழிற்பயிற்சி படிப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *