ஏ.ஐ.டி.யு.சி அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் பெரியகுளம் நகராட்சி முன் நடந்த மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் தோழர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தோழர் m.கர்ணன், மாவட்ட செயலாளர் k.பிச்சைமுத்து, மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் ராஜேந்திரன், தோழர் முத்துச்சாமி மற்றும் பெரும் திரளாக துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
கடந்த 2.10.2021 அன்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தூய்மை பணி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 391 ரூபாய் என உத்தரவு வெளியிட்டார்கள். இந்த உத்தரவை வாபஸ் வாங்க வேண்டும் என்றும், அரசு ஆணை எண் 62 படி நாளொன்றுக்கு சம்பளம் ரூபாய் 579 வழங்க வேண்டும் என்று கேட்டு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.