

பெங்களூரில் இருந்து இஸ்ரோ தலைவர் வி நாராயணன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் கூறியதாவது,
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100-வது ராக்கெட்டை கடந்த ஜனவரி மாதம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதையடுத்து வரும் 18ஆம் தேதி 101 வது ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளோம்.

1979 ஆம் ஆண்டு முதன்முதலில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பினோம் அது, அது 98 சதவீதம் வெற்றி அடைந்தது. அதன் பிறகு 1980 ஆம் ஆண்டு அனுப்பிய எஸ் எல் வி ராக்கெட் 100 சதவீதம் வெற்றி பெற்றது.
தற்போது 18ஆம் தேதி அனுப்பப்பட உள்ள 101 வது ராக்கெட் ஏவுதளம் மிக முக்கியமானது. பிஎஸ்எல்வி சி61 இந்த ராக்கெட் மூலம் பூமியில் உள்ள பெரும்பாலனாவைகளை கண்டுபிடிக்க முடியும்.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தாக்குதலின் போது நமது அனைத்து சேட்டிலைட்களும் நன்றாக வேலை செய்தது. இந்தியா தற்போது பயங்கர வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது உலகத்தில் இருக்கக்கூடிய சிறந்த கேமராவில் ஒன்று நமக்கு நிலவில் உள்ளது.
நாம் எந்த நாடு உடனும் போட்டி போடவில்லை நம் நாட்டுக்கு என்ன தேவையோ அதை செய்து கொண்டிருக்கிறோம். நம் நாடு அனுப்பக்கூடிய சேட்டிலைட் அனைத்தும் நம் நாட்டு மக்கள் சந்தோஷமாக வாழ்வதற்கும், நம் நாட்டு மக்களுக்கு தேவைப்படுகின்ற பாதுகாப்புக்காக தான் நாம் அனுப்புகின்றோம். அனைத்து சேட்டிலைட்களும் நன்றாக வேலை செய்கிறது.
நாம் அனுப்பப்படும் சாட்டிலைட் தொலைக்காட்ச, தொலைபேசி, மக்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் எனத் தொடர்ந்து பயன்பட்டு வருகிறது.
மங்கள்யான் திட்டத்தில் நாம் அனுப்பியது ஆர்பீட்டர் இயந்திரம் தற்போது மங்கள்யானில் லேண்டிங் இயந்திரம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு வருடங்களில் இந்த பணிகள் முடிக்கப்படும் இவ்வாறு கூறினார்.

