• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தவெக நிர்வாகி V.விஜய்ராஜ் – தண்ணீர் பந்தல் திறப்பு

ByR.Arunprasanth

Apr 28, 2025

வண்டலூரில் தவெக நிர்வாகி V.விஜய்ராஜ் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர், நுங்கு, ஜூஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம், வண்டலூர் ஊராட்சி பகுதி தலைமை சார்பில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில்
பேருந்து நிறுத்தத்தில் வண்டலூர் தவெக நிர்வாகி வண்டலூர் V.விஜயராஜ் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அதன்படி தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

இதில் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் MGK.மோகன் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

பின்னர், பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர், இளநீர், நுங்கு, ஜூஸ் என பொதுமக்களுக்கு கோடை வெயிலை தணிக்கும் பொருட்களை வழங்கினர். இதில் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் மகிழ்ழ்சியாக வாங்கி சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார், வண்டலூர் பகுதி தவெக நிர்வாகி வண்டலூர் விஜய்ராஜ், அப்பு, அன்பு, சதீஷ், யுவராஜ், சுமெஷ், வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.