கன்னியாகுமரி மூன்று கடல்கள் சங்கமத்தில் “தை”அமாவாசை புனித நீராடினார்கள்
மறைந்த முன்னோர் நினைவில், கன்னியாகுமரி இயற்கை அமைப்பில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் பகுதி என்பதை கடந்து சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையும் பார்க்க கூடிய இடம். குமரியில் தை மற்றும் ஆடி மாதம் வரும் அமாவாசை தினங்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு ஒரு முக்கியமான புனித நாள்.
“தை”அமாவாசை தினமான இன்று அவர்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர் நினைவை போற்றி திதி கொடுப்பது தொன்று தொட்டு தொடரும் வழக்கம்.


கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், குழித்துறை தாம்பரபரணி ஆற்றின் கரையில் குடும்பத்தில் மறைந்த பெற்றோர்கள் நினைவை போற்றும் வகையில் ஐயர் மூலம் மந்திரம் ஓதி கொடுக்கும் தர்ப்பை புல், எள்ளு, குங்குமம்,சந்தனம் இவற்றை வாழை இலையில் வைத்து ஐயர் கொடுப்பதை புனித நீராட செல்பவர்கள் அதனை தலையில் வைத்த வண்ணம் கடலுக்கு சென்று கடல் நீரில் மூழ்கி நீர் நிலைகளில் விட்டு விடுவது ஐதீகம். இந்த நிகழ்வு கன்னியாகுமரி மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரைகளில் இன்று இந்த தர்பணம் நிகழ்வில் ஏராளமான பேர்கள் தங்கள் மூதாதையர் நினைவை போற்றும் வகையில் பங்கேற்றார்கள்.


கன்னியாகுமரி கடற் கரை பகுதிக்கு நீராட செல்பவர்கள் வசதிக்காக கடற்கரை ஓரங்களில் வாகனங்கள்,இரு சக்கர வாகனங்கள் செல்லாத படி காவல்துறை தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.
கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் சீர் உடை அணிந்த காவலர்களும்,சீர் உடை அணியாத காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கடலோர காவல்படை மை சேர்ந்த காவலர்கள் பக்த்தர்கள் கடலின் ஆழம் ஆன பகுதிக்கு செல்லாமலும், கடலில் உள்ள ஆபாத்தான பாறைகளில் பக்தர்கள் செல்லாதவாறு கண்கணித்தார்கள்.
” ஆடி”அமாவாசை தினத்தில் கூடும் பெரும் கூட்டம் “தை” அமாவாசையின் போது இருப்பதில்லை.