கன்னியாகுமரி மாவட்டம்,கன்னியாகுமரி ,YMCA கூட்டரங்கத்தில் வைத்து இன்று (27.01.25 )ல் அமைப்புசாரா தொழிலாளர்கள் அமைப்பின் துணை அமைப்பான தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களுக்கான உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் சார்பில், மத்திய, மாநில அரசை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் கிடைக்க வழிவகை செய்ய தரக்கேட்டு, தேசிய கருத்து பரப்புரை நிகழ்ச்சி உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுவாமி அவர்கள் தலைமையில் இன்று (27.01.25) விவேகானந்தபுரம் YMCA கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சகுந்தலா, உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாபு, கன்னியாகுமரி கூட்டமைப்பு பொறுப்பாளர் ஜெய சுந்தரம், கோட்டாறு மக்கள் கூட்டமைப்பு பொறுப்பாளர் செல்வராஜ், நாகர்கோவில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு பொறுப்பாளர் சகாய செல்வி ஆகியோர் உட்பட 45/30 பேர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1 )பெண் பணியாளர்களுக்குபணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவு ஏற்படாமல் அரசு சார்பில் பாதுகாப்பு தர வேண்டும் எனவும்,
2 )அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் இஎஸ்ஐ வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
3)வீடு இல்லாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
4)சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கல்வி, வீடு போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வட்டியில்லா கடன் உதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்,

5)அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் தேசிய காப்பீடு சமூக பாதுகாப்பு பயன்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும்,
6)அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
7)அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அவர்கள் வாழ்நிலைக்கேற்ப நியாயமான குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும்,
8)கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த அமைப்புசாரா மீன்பிடித்தொழிலாளர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள், சமூக பாதுகாப்பு,நியாயமான குறைந்தபட்ச கூலி, பாதுகாப்பான பணிச்சுழல், தொழிலாளர்களுக்கு உரிய மதிப்பு போன்றவை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், 8 தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
