• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்…5 பேர் பலி

ByA.Tamilselvan

Sep 12, 2022

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பப்புவா நியூ கினியா நாட்டின் மொரோப் மாகாணத்துக்கு உட்பட்ட மிகப்பெரிய துறைமுக நகராக அறியப்படும் லே நகரம் உள்ளது. இந்த நகரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது, ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.இதனால் மக்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளதாகவும், சில சுகாதார நிலையங்கள், வீடுகள், கிராமப்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகியவை சேதம் அடைந்துள்ளதாகவும் ஐநா அறிக்கையில் கூறியுள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளது. இதனால், கிழக்கு பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.